3. ஏசு கிறிஸ்து (கி.மு.6-கி.பி.30) :: Puduvalasai Jamath
மனிதகுல வரலாற்றில் ஏசு கிறிஸ்துவின் தாக்குறவு தெளிவானது; அளப்பரியது. எனவே, இந்தப் பட்டியலில் அவருக்கு முதலிடம் அளிப்பதற்கு யாரும் மறுப்புக் கூற மாட்டார்கள். அப்படியிருக்க, வரலாற்றில் மிகப் பெரும் செல்வாக்குடன் விளங்கும் ஒரு சமயத்திற்கு அருட் கிளர்ச்சியாகத் திகழும் ஏசு கிறிஸ்துவிற்கு ஏன் முதலிடம் அளிக்கவில்லை என்ற வினா எழுவது இயற்கையே.
காலப்போக்கில், வேறெந்த சமயத்தையும் விட மிக அதிகமான பற்றாளர்களைக் கொண்ட சமயம் கிறிஸ்துவம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் பல்வேறு சமயங்களின் அளவினை மதிப்பிடுவது இந்நூலின் நோக்கமன்று. தனி மனிதர்களின் செல்வாக்கின் ஆற்றலை மதிப்பிடுவதே இந்நூலின் நோக்கமாகும். இஸ்லாம் சமயத்தைப் போலன்றி, கிறிஸ்துவம் ஒரு தனி மனிதரால் நிறுவப்பட்டதன்று. அதை நிறுவியவர்கள் ஏசு கிறிஸ்து , புனித பவுல் ஆகிய இருவருமாவர். இவ்விருவரில், கிறிஸ்துவத்தை வளர்த்துப் பரப்பிய சாதனையில் ஒரு கணிசமான பகுதிக்குப் புனிதர் பவுல் உரிமையுடையவராவார் என்பதை மறுப்பதற்கில்லை. கிறிஸ்துவ சமயத்தில் அடிப்படை அறநெறிக் கொள்கைகளையும், அதன் அடிப்படை ஆன்மீனக் கண்ணோட்டத்தையும் ஏசு கிறிஸ்து வகுத்தமைத்தார். மனிதர் நடத்தை பற்றிய அதன் முக்கிய கொள்கைகளையும் வகுத்தவர் ஏசு தான். எனினும் கிறிஸ்துவத்தின் இறைமையியலை (Theology) முக்கியமாக உருவாக்கியவர் புனிதர் பவுல் ஆவார். ஏசு ஓர் ஆன்மீக அருட் செய்தியை வழங்கினார்; அதனுடன் கிறிஸ்து வழிபாட்டினைப் புனிதர் பவுல் சேர்த்தார். மேலும், புதிய ஏற்பாட்டின் ஒரு கணிசமான பகுதியை ஆக்கியவர் புனித பவுல், அத்துடன், முதல் நூற்றாண்டின் போது கிறிஸ்துவத்திற்கு மதமாற்றம் செய்வதில் பெரும் பங்கு கொண்டவரும் அவர் தான்.
புத்தரையோ, முஹம்மது நபியையோ போலன்றி, ஏசு இறக்கும் போது மிகவும் இளைஞராகவே இருந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான žடர்களையே விட்டுச் சென்றார். ஏசு காலமான போது, அவருடைய ஆதரவாளர்கள் ஒரு சிறிய யூதக் கிளைப் பிரிவினராகவே இருந்தனர். புனிதர் பவுலின் எழுத்துகளினாலும், அவர் மேற் கொண்ட இடைவிடாத மத மாற்ற முயற்சிகளினாலும், இந்தச் சிறிய கிளைப் பிரிவு ஓர் ஆற்றல் மிக்க பேரியக்கமாக உருமாறி, யூதர்களிடமும், யூதர் அல்லாதவரிடமும் ஊடுருவிப் பரவி, உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்றாக வளர்ந்தது.
இந்தக் காரணங்களினாலேயே ஒரு சாரார், ஏசு கிறிஸ்துவதைவிடப் புனிதர் பவுலையே கிறிஸ்துவத்தை நிறுவியவர் எனக் கருத வேண்டும் என்று கூறுவர். அவர்களின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின், இந்தப் பட்டியலில் ஏசுவைவிட உயர்ந்த இடத்தைப் புனிதர் பவுலுக்கு அளிக்க வேண்டும். ஆயினும், புனிதர் பவுலின் செல்வாக்கு இல்லாது போயிருப்பின் கிருஸ்துவம் என்னவாகியிருக்கும் என்று தெளிவாகக் கூற முடியாது என்ற போதிலும், ஏசு கிறிஸ்து இல்லாது போயிருந்தால் கிறிஸ்துவமே இல்லாது போயிருக்கும் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும். எனினும், பிற்காலத்தில் கிறிஸ்துவ திருச்சபைகளும், தனி கிறிஸ்துவர்களும் ஏசு கிறிஸ்துவின் பெயரால் செய்த செயல்கள் அனைத்திற்கும் ஏசுவைப் பொறுப்பாளியாக்குவது நியாயமாகத் தோன்றவில்லை. உண்மையைக் கூறின், ஏசு உயிருடனிருந்திருந்தால், அவர்களுடைய செயல்களைக் கண்டித்திருக்கவே செய்வார். பல்வேறு கிறிஸ்துவக் கிளைப் பிரிவினரிடையே நடைபெற்ற சமயப் போர்களையும், யூதர்களைக் காட்டுமிராண்டித்தனமாக இனப் படுகொலை செய்ததும் ஏசுவின் போதனைகளுக்கும் கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானவையாகும். இக்கொடுமைகளுக்கு ஏசு கிறிஸ்து அகத் தூண்டுதலாக இருந்திருப்பார் எனக் கூறுவது சிறிதும் பொருந்தாது.
அது போன்றே, நவீன அறிவியல், மேற்கு ஐரோப்பாவிலுள்ள, கிறிஸ்துவ நாடுகளில் முதலில் தோன்றிய போதிலும், அறிவியலின் தோற்றத்திற்கு ஏசுவே காரணம் எனக் கூறுவதும் ஏற்புடையதாக இல்லை. இயற்பியல் உலகினை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும் என்று ஏசு கிறிஸ்துவின் போதனைகள் வலியுறுத்தியதாக ஆதி கிறிஸ்துவர்கள் யாரும் விளக்கம் கூறவில்லை. உண்மையைக் கூறுவதாயின், ரோமானிய உலகம் கிருஸ்துவத்திற்கு மாறிய பின்பு, பொதுவாகத் தொழில் நுட்பத்தின் தரம் வீழ்ச்சியுற்றது என்றும், அறிவியலில் பொதுவாக ஆர்வம் குறைந்தது என்றும் கூற வேண்டும்.
எனினும், இறுதியில் ஐரோப்பாவில் அறிவியல் வளர்ச்சியடைந்தது என்றால், அது அறிவியல் சிந்தனைக்கு ஆதரவான 'ஏதோ ஒன்று' ஐரோப்பியப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உட்கிடையாக இருந்தது என்பதையே காட்டுகிறது. அந்த ஏதோ ஒன்று ஏசுவின் போதனைகள் தான் என்று கூற முடியாது; மாறாக, அரிஸ்டாட்டில், யூக்ளிடு போன்ற அறிஞர்களின் நூல்கள் வளர்த்த கிரேக்கப் பகுத்தறிவு வாதமே அந்த ' ஏதோ ஒன்று ' ஆகும். திருச்சபையினர் ஆதிக்கம் செலுத்திய போதோ, கிறிஸ்துவ பக்தி இயக்கத்தின் போதோ நவீன அறிவியல் எழுச்சி பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மாறாக, ஐரோப்பாவில், கிறிஸ்தவத்திற்கு முந்திய பாரம்பரியத்தில் மீண்டும் ஆர்வம் தோன்றிய காலமாகிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது தான் அங்கு நவீன அறிவியல் முன்னேற்றமடைந்தது.
ஏசு கிறிஸ்துவின் வரலாறு புதிய ஏற்பாட்டில் விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. அதனை வாசகர்கள் நன்கறிவர். எனவே, அதை, இங்கு மீண்டும் கூறப்போவதில்லை. எனினும், சில முக்கிய அம்சங்களை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். முதலாவதாக, ஏசுவின் வாழ்க்கை குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை ஐயத்திற்கிடமாக உள்ளன. அவருடைய இயற்பெயர் கூட என்னவென்று தெரியவில்லை. யூதர்களிடையே பொதுவாக வழங்கப்படும் ' யஹோஷ•வா ' (ஆங்கிலத்தில் 'ஜோஷ•வா') பிறந்த ஆண்டு கூட உறுதியாகத் தெரியவில்லை. கி.மு. ஆறாம் ஆண்டில் அவர் பிறந்திருக்கலாம் என்று தான் கூறுகின்றனர். அவர் இறந்த ஆண்டு அவருடை žடர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அது கூட இன்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏசு எந்த நூலையும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை. அவருடைய வாழ்க்கை பற்றிக் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் விவரிக்கப் பட்டுள்ளவையே யாகும்.
ஏசுவின் அருட்போதனைகள் (நற்செய்தி) பல்வேறு அம்சங்களில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஏசுவின் கடைசி மொழிகள் குறித்து மத்தேயும், லூக்காஸ•ம் முற்றிலும் வேறுபட்ட வாசகங்களைக் கூறுகின்றனர். இந்த இரு வாசகங்களும் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட நேரடி மேற்கோள்களாகவே அமைந்துள்ளன. ஏசு கிறிஸ்து கிறிஸ்துவத்தின் தந்தையாக இருந்த போதிலும், அவர் சமயப் பற்று மிகுந்த ஒரு யூதராக விளங்கினார். அவர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கலாம். ஏசு பல அம்சங்களில் ஹ“ப்ரு தீர்க்க தரிசிகளை ஒத்திருப்பதாகவும் அவர்கள் அவரிடம் ஆழ்ந்த பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் கூறுவர். தீர்க்கதரிசிகளைப் போலவே ஏசு கிறிஸ்துவும் மனக்கிளர்ச்சியை உண்டாக்கத்தக்க ஆளுமையைக் கொண்டிருந்தார். அவருடைய தோற்றம் அவரை தரிசித்த மக்களை வெகுவாகக் கவர்ந்தது. காண்பவரைத் தன் வயப்படுத்தும் கவர்ச்சியாற்றல் அவருக்கு முழுமையாக அமைந்திருந்தது.
முஹம்மது நபியிடமிருந்து ஏசு கிறிஸ்து வெகுவாக வேறுபடுகிறார். நபிகள் நாயகம் அரசியல் மற்றும் சமய அதிகாரம் இரண்டையும் செலுத்தினார். ஆனால், ஏசு தம் காலத்திலும், தமக்குப் பிந்திய நூற்றாண்டிலும் அரசியல் நிகழ்வுகளில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. (ஆனால் , நீண்ட கால அரசியல் பாதிப்பையும் அவர்கள் இருவருமே பெருமளவுக்கு மறை முகச் செல்வாக்காகக் கொண்டிருந்தார்கள் என்பதில் ஐயமில்லை) அறநெறி மற்றும் ஆன்மீகத் தலைவர் என்ற முறையில் மட்டுமே ஏசு கிறிஸ்து தமது செல்வாக்கு முழுவதையும் பெற்றார்.
அறநெறித் தலைவர் என்ற முறையில் ஏசு தமது முத்திரையைப் பதித்துச் சென்றார் என்றால், அவருடைய செல்வாக்குப் பெற்றது என்ற கேள்வி எழுவது இயல்பே. பொன் போன்ற நடைமுறை விதி ஏசு போதித்த முதன்மையான நீதிகளில் ஒன்று. இந்த விதியை இன்று பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். நன்னெறி நடத்தைக்கு இது நேரிய வழிகாட்டி என கிறிஸ்துவர்களும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் ஒரு மனதாகப் போற்றுகின்றனர். இந்த நன்னெறிக்கிணங்க நாம் எப்போதும் நடக்காமலிருக்கலாம். ஆயினும், அவ்விதம் நடப்பதற்கு நாம் முயலுகின்றோம். உலக மக்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட அந்த நெறி முறையை உண்மையில் வகுத்தவர் ஏசு கிறிஸ்துதான் என்றால் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியவர் அவர்தான் என்பதில் ஐயமில்லை.
ஏசு பிறப்பதற்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இந்தப் " பொன் விதி" யை யூத சமயம் ஏற்றுக் கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த யூத சட்ட வித்தகர் ராபி ஹ’ல்லேல் இந்த விதியை விரிவாக விளக்கிக் கூறி யூத சமயத்தின் தலையாய தத்துவம் இதுதான் என அறிவித்தார். இந்தக் கோட்பாட்டினை மேலை உலகம் மட்டுமே அறிந்திருந்தது என்றும் கூற முடியாது. žனத் தத்துவஞானி கன்ஃபூசியஸ் கி.மு. 500 ஆம் ஆண்டிலேயே இந்த கொள்கையை எடுத்துரைத்திருக்கிறார். பண்டைய இந்துக் காப்பியமாகிய " மகா பாரத " த்திலும் இந்தத் தத்துவம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. உண்மையைக் கூறின், உலகிலுள்ள பெரிய சமயங்கள் அனைத்துமே " பொன் விதி" யின் அடிப்படையான தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கூறுவதால், ஏசு சொந்த அறிவியல் கொள்கைகளை வகுக்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா? முடியவே முடியாது! இது பற்றி மத்தேயுவின் நூலில் (5: 43- 44) மிக முக்கியமானதொரு கருத்து காணப்படுகிறது.
" அருகிலுள்ளவர்களை நேசிக்க வேண்டும். என்றும் வகைவர்களை வெறுக்க வேண்டும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகை வரை நேசியுங்கள்; உங்களைச் சபிப்பவர்களுக்கு நீங்கள் ஆசி கூறுங்கள்; உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் நன்மையே செய்யுங்கள்; உங்களை அவமதித்து, அடக்கிக் கொடுமைப்படுத்து பவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்."
இதற்குச் சில வரிகளுக்கு முன்னால், " தீங்கினை எதிர்க்காதீர்கள். உங்கள் வலது கன்னத்தில் அடிப்பவருக்கு அடுத்த கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" என்ற பொன் மொழி காணப்படுகிறது.
இந்தக் கொள்கைகள், ஏசு காலத்திய யூத சமயத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. பெரும்பாலான மற்றச் சமயங்களும் இக்கொள்கைகளை வலியுறுத்தவில்லை. இவை ஏசு சொந்தமாகக் கூறிய மிகச் சிறந்த அறநெறிக் கொள்கைகள் ஆகும். இந்தக் கொள்கைகள் உலகெங்கும் பின்பற்றப்பட்டிருக்குமானால் இந்த நூலில் ஏசுவுக்குச் சிறிதும் தயக்கமின்றி முதலிடம் அளிக்கலாம்.
ஆனால், உண்மை என்னவெனில், உலகெங்கும் இக்கொள்கைகள் பெருமளவில் பின்பற்றப்படவில்லை. இக்கொள்கைகள் பொதுவாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. " பகைவரையும் நேசிக்க வேண்டும்" என்ற போதனை ஒரு கற்பனை உலகிற்குத் தான் ஏற்றது என்றும். நாம் வாழும் நடைமுறை உலகுக்கு அது ஏற்புடையதன்று என்றும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கொள்கையை நாம் கடைப்பிடிப்பதில்லை. மற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென நாம் எதிர் பார்ப்பதும் இல்லை. நமது குழந்தைகளுக்கு இக்கொள்கைப்படி ஒழுகுமாறு நாம் போதிப்பதில்லை. எனவே, ஏசு கிறிஸ்துவின் பெரும்பாலான உன்னதப் போதனைகள், மனக் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பினும், இன்றும் அடிப்படையில், நடைமுறையில் பரிசோதித்துப் பார்க்கப்படாத குறிப்புரைகளாகவே இருந்து வருகின்றன.

No comments:
Post a Comment