Thursday, December 15, 2011

Histroy


கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்.

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு.

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு).

காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு).

பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு).

பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு).

மதுரா விஜயா - கங்கா தேவி.

அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்.

பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு).

பாரவி - இராதார்ச்சுனியம்.

சூத்திரகர் - மிருச்சகடிகம்.

ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்.

வராகமிகிரர் - மிருகத்சம்கிதை.

வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

அமரசிம்மர் - அமரகோசம்.

பாரவி - கிராதார்ஜீனியம்.

தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்.

மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்.

வியாசர் - மகாபாரதம்.

திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி.

வால்மீகி - இராமாயணம்.

புகழேந்தி - நளவெண்பா.

சேக்கிழார் - பெரிய புராணம்.

செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி.

ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்.

அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்.

பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்.

ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்.

காமசூத்திரம் - வாத்சாயனார்.

இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்.

பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா.

இராஜதரங்கனி - கல்ஹாணர்.

ஷாநாமா - பிர்தௌசி.

கீதகோவிந்தம் - ஜெயதேவர்.

யுவான்சுவாங் - சியூக்கி.

நூல் ஆசிரியர் :------

துசக்-இ-பாபரி -பாபர்.

தாரிக்-தி-ரஷீத் -மிர்சா.

ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்.

தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்.

காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்.

தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்.

அக்பர் நாமா -அபுல் பாசல்.

அயினி அக்பரி -அபுல் பாசல்.

தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்.

தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்.

இக்பால் நாமா -முகபத்கான்.

பாதுஷா நாமா -அப்துல் அமீது.

ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்.

முண்டகப் உல் ஓபாப் -காபீகான்.

கல்வெட்டுகளும், பட்டயங்களும் :----

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு.

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்.

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்.

மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்.

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்.

ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.

உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்.

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்.

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்.

உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்.

உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை.

ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்.

நாணயங்கள் :------

தினார் - குப்தர் தங்க நாணயங்கள்.

கச்சா - இராம குப்தர்.

டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்.

பகோடா - விஜய நகர நாணயம்.

டாம் - அக்பர் நாணயம்.

நினைவுச் சின்னங்கள் :--------

பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு.

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு.

மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு.

பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு.

குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு.

ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு.

கட்டிடக்கலை :------

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி).

எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்.

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி).

எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்.

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி).

எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்.

4. மண்டபக் கோயில்கள்.

எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்.

5. பிறவகைக் கோயில்:-
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்.

காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்.

மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்.

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்.

மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்.

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்.

ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்.

அயல் நாட்டவர் :-------

மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்).

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்).

பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்).

பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்).

யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்).

அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது).

இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்).

சங்கக் காலம்:----------

சேரநாடு :----

கொங்கணக் கடற்கரைக்கு தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரைப் பகுதியும், கொங்கு நாடும் இணைந்த பகுதி சேரநாடு.

தலைநகர் வஞ்சி- அல்லது கரூர்.

சின்னம் - வில்.

தலைசிறந்த மன்னன் - செங்குட்டுவன்.

மாலை - பனம் பூ.

சோழ நாடு :--------

தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியது சோழ நாடாகும்.

தலைநகர்- காவிரிப்பூம்பட்டினம்.

சின்னம் - புலி.

தலைசிறந்த மன்னன் - கரிகால சோழன்.

மாலை - அத்தி மாலை.

பாண்டிய நாடு :--------

மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது.

தலைநகர் - மதுரை.

சின்னம் - மீன்

தலைசிறந்த மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

மாலை - வேப்ப மாலை.

அரச வம்சத்தை தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள் :---------

பல்லவ வம்சம் - சிம்ம விஷ்ணு, நந்தி வர்மன்-2.

சோழ வம்சம் - விஜயாலயன், குலோத்துங்கன்-1.

பிரத்திஹாரர்கள் - நாகபட்டா-1, கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2.

ராஷ்டிரகூடர் வம்சம் - நந்தி துர்கா, கரகா-2.

அடிமை வம்சம் - குத்புதீன் ஐபக், சைகுபாத்.

கில்ஜி வம்சம் - ஜலாலுதீன், குஸ்ரோகான்.

துக்ளக் வம்சம் - கியாசுதின் துக்ளக், நசுருதின் முகமது.

சையது வம்சம் - கிசர்கான், அலாவுதீன் ஆலம் ஷா.

லோடி வம்சம் - பகலூல்கான் லோடி, இப்ராஹிம் லோடி.

மொகலாய வம்சம் - பாபர், இரண்டாம் பகதூர்ஷா.

நந்தவம்சம் - மகாபத்மா நந்தர் , தனநந்தர்.

முக்கிய போர்கள் :--------

1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.௩௨௬.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்:-

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

3. கலிங்கப்போர் கி.மு.261:-

அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.

4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713:-

முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.

5. தானேசர் போர் கி.பி. 1014:-

முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.

6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175:-

முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.

7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191:-

அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.

8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192:-

முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.

9. செங்கிஸ்கான் படையெடுப்பு:-

செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.

10. தைமூர் படையெடுப்பு:-

தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.

11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526:-

பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.

12. கன்வா போர் கி.பி.1527:-

பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.

13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556:-

அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.

14. தலைக்கோட்டை போர் கி.பி.1565:-

விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.

15. ஹல்திகாட் போர் கி.பி.1576:-

மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.

16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739:-

ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748:-

முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54:-

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.

19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63:-

வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.

20. பிளாசிப் போர் கி.பி. 1757:-

ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

21. வந்தவாசி போர் கி.பி.1760:-

பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.

22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761:-

மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.

23. பக்சார் போர் கி.பி.1764:-

சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69:-

ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.

25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84.

ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92.

பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799:-

ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18:-

மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819.:-

ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.

30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819:-

ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.

31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:-

ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.

32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49:-

ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.

33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857:-

ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் :--------

கி.மு :---

1500 - சிந்து சமவெளி நாகரிகம்.

1000 - ஆரியர்கள் காலம்.

550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன.

554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

518 - பாரசீகர்களின் ஆதிக்கம்.

326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.

321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்.

232 - அசோகரின் ஆட்சிகாலம்.

கி.பி :----

78 - சக வருடம் தொடங்கியது.

98-117 - கனிஷ்கரின் காலம்.

320 - முதலாம் சந்திரகுப்தர்.

606 - ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்.

609 - சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்.

622 - ஹஜிரா வருட தொடக்கம்.

711 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்.

985 - ராஜ ராஜ சோழனின் காலம்.

1026 - முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்.

1992 - முதலாம் தரேயின் போர்.

1191 - இரண்டாம் தரேயின் போர்.

1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்.

1232 - குதுப்மினார் கட்டப்பட்டது.

1290 - கில்ஜி வம்சம்.

1298 - மார்கோபோலோ இந்தியா வருகை.

1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.

1424 - டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது.

1451 - லோடிவம்சம்.

1489 - அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது.

1496 - குருநானக் பிறப்பு.

1498 - வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்.

1526 - முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்.

1530 - ஹூமாயூன் மன்னரானார்.

1539 - குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்.

1556 - ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்.

1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்.

1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது.

1576 - மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்

1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்.

1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது.

1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.

1605 - மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்

1606 - குரு அர்ஜூன் சிங் மறைவு.

1627 - ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு.

1631 - ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.

1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.

1658 - ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.

1664 - சிவாஜி அரியணை ஏறினார்.

1666 - குரு கோவிந்த சிங் பிறந்தார்.

1675 - சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.

1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1707 - முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.

1708 - சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.

1720 - பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.

1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.

1757 - பிளாசி போர் நடைபெற்றது.

1760 - வந்தவாசிப் போர்.

1761 - மூன்றாம் பானிபட் போர்.

1764 - பக்ஸர் போர்.

1767 - முதல் மைசூர் போர்.

1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.

1780 - சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.

1784 - பிட் இந்திய சட்டம்.

1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.

1796 - மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.

1799 - நான்காம் மைசூர் போர்.

1803 - மராத்தியப் போர்.

1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.

1839 - ரஞ்சித் சிங் இறப்பு.

1845-46 - ஆங்கிலோ சீக்கியப் போர்.

1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.

1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.

1857 - ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.

1858 - ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.

1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.

1899 - கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.

1905 - முதல் வங்கப் பிரிவினை.

1906 - முஸ்லீம் லீக் உதயம்.

1908 - செய்தித்தாள் சட்டம்.

1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.

1915 - இந்திய ராணுவச் சட்டம்.

1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.

1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.

1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.

1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.

1925 - சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.

1928 - சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.

1929 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.

1930 - சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.

1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.

1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.

1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.

1935 - இந்திய அரசுச் சட்டம்.

1940 - இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.

1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.

1943 - வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

1946 - கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.

1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது. 

No comments:

Post a Comment