ஆரியர்களின் வருகைக்குப் பிறகிலிருந்து கிபி.1000 வரை பண்டைய இந்திய வரலாறு(Ancient Indian History) என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார் சிந்துசமவெளி நாகரிக காலத்திலிருந்து, கிபி1000 வரை என்றும். (இன்னொரு சாரார், இந்தக் காலக் கனக்கை ஏற்றுக்கொள்ளாமல் புதியக் காலக்கணக்கையும் வெளியிடுகிறார்கள்.) ஆனால், இந்தக் காலக் கணக்கு (சிந்துசமவெளி நாகரிக காலம் -கிபி1000) பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. மத்தியகால இந்திய வரலாறு (Medieval Indian History) கிபி1000த்திலிருந்து, கிபி1757ல் பிளாசிப்போரின் வெற்றிக்குப்பிறகான, பிரிட்டிஷார் ஆதிக்க துவக்ககாலம் வரை வரையறுக்கப்படுகிறது. அதற்கு பிந்தைய வரலாறு, நவீன இந்திய வரலாறாக(Modern Indian History) வரையறுக்கப்படுகிறது.
வேதகால சமூகத்தில் சபா, சமிதி என்ற அவைகள் இருந்ததையும், அவை தலைவனுக்கு (அரசனாக பாவிக்கப்பட்டவனுக்கு) ஆலோசனை கூறும் அவையாகவும் இருந்தது, அதை ஒரு அரைகுறையான மக்களாட்சியாக எடுத்துக்கொள்ளலாம், அதற்குப் பிறகு எல்லாமே மன்னராட்சி, மகா மன்னராட்சி, காட்டாட்சி, பேயாட்சி, அடாவடியாட்சி தான். அந்த அரசர்களின், அரசாட்சிகளின் கால அளவை கொஞ்சம் பார்ப்போம்.
- கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கம் - சந்திர குப்த மௌரியர்.
- கிமு273 அசோகர் ஆட்சிக்காலம், கிமு265ல் கலிங்கப்போர், வெற்றி அதன் பிறகு அசோகரின் மனமாற்றம். கிமு232 அசோகர் மரணம்.
- மௌரியர்கள் ஆட்சிக்காலமும் அவர்கள் வம்சமும் அழிகிறது. அதன்பிறகு சுங்க வம்சம் வருகிறது.
- கிபி முதல் நூற்றாண்டில் குஷானர்கள் வருகிறார்கள்.
- கிபி240 ல் பாடலிபுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, குப்த பேரரசு தொடங்குகிறது.
- சந்திர குபதர்களும், சமுத்திர குப்தர்களும் தொடர்ந்து ஆட்சி செய்கிறார்கள்.
- கிபி450களில் ஹீனர்கள் படையெடுப்பு நடைபெற்றது.
- கிபி 600களில் ஹர்ஷவர்தர் ஆட்சி
- கிபி1000 முகமது கஜினி படையெடுப்பு தொடங்குகிறது.
- கிபி1200களில் கோரி வம்சத்தார் ஆட்சிக்கு வருகிறார்.
- கிபி1221 செங்கிஸ்கான் என்ற பெரும்புயல் வந்து பஞ்சாப்பையெல்லாம் வேட்டையாடி சென்றது.
- கிபி1310 அலாவுதீன் கில்ஜி வருகைக்கு பிறகு கில்ஜிக்களின் காலம்.
- கிபி1345களில் முகமது பின் துக்ளக் காலம்
- கிபி1450களில் லோடிக்களின் காலம்
- கிபி1526 பாபர் வருகை மொகலாயர் ஆட்சிக்காலம் தொடக்கம். பாபர், ஹீமாயுன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப், பெயர் தெரியாத, ஓட்டையாண்டி ராஜ்ஜியம் நடத்திய கொஞ்சம் மொகலாய அரசர்கள், பிரிட்டிஷார் வந்து முடித்து வைத்த இரண்டாம் பகதூர்ஷா என ஒரு 300 ஆன்டுகாலம், மொகலாயர் சாம்ராஜ்ஜியம்.
- கிபி1757-1857 கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலம்
- கிபி1857 -1947 பிரிட்டிஷ் நேரடி ஆட்சி.
- கிபி1947லிருந்து 2010 வரை இந்தியா குடியரசாக இருந்து வருகிறது. வேதகால நாகரிகத்தில் சமிதியிலும், சபாவிலும் மக்களுக்கு என்ன பிரதிநிதித்துவம் இருந்ததோ, அந்த அளவுக்கும் குறைவாக மக்கள் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment