Wednesday, December 28, 2011

Name

Friday, December 16, 2011

புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்


ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயன சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யானசுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - சிவாஜி ராவ் 

Thursday, December 15, 2011

இந்திய அரசர்கள்


ஆரியர்களின் வருகைக்குப் பிறகிலிருந்து கிபி.1000 வரை பண்டைய இந்திய வரலாறு(Ancient Indian History) என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார் சிந்துசமவெளி நாகரிக காலத்திலிருந்து, கிபி1000 வரை என்றும். (இன்னொரு சாரார், இந்தக் காலக் கனக்கை ஏற்றுக்கொள்ளாமல் புதியக் காலக்கணக்கையும் வெளியிடுகிறார்கள்.) ஆனால், இந்தக் காலக் கணக்கு (சிந்துசமவெளி நாகரிக காலம் -கிபி1000) பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. மத்தியகால இந்திய வரலாறு (Medieval Indian History) கிபி1000த்திலிருந்து, கிபி1757ல் பிளாசிப்போரின் வெற்றிக்குப்பிறகான, பிரிட்டிஷார் ஆதிக்க துவக்ககாலம் வரை வரையறுக்கப்படுகிறது. அதற்கு பிந்தைய வரலாறு, நவீன இந்திய வரலாறாக(Modern Indian History) வரையறுக்கப்படுகிறது.
வேதகால சமூகத்தில் சபா, சமிதி என்ற அவைகள் இருந்ததையும், அவை தலைவனுக்கு (அரசனாக பாவிக்கப்பட்டவனுக்கு) ஆலோசனை கூறும் அவையாகவும் இருந்தது, அதை ஒரு அரைகுறையான மக்களாட்சியாக எடுத்துக்கொள்ளலாம், அதற்குப் பிறகு எல்லாமே மன்னராட்சி, மகா மன்னராட்சி, காட்டாட்சி, பேயாட்சி, அடாவடியாட்சி தான். அந்த அரசர்களின், அரசாட்சிகளின் கால அளவை கொஞ்சம் பார்ப்போம்.
  • கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கம் - சந்திர குப்த மௌரியர்.
  • கிமு273 அசோகர் ஆட்சிக்காலம், கிமு265ல் கலிங்கப்போர், வெற்றி அதன் பிறகு அசோகரின் மனமாற்றம். கிமு232 அசோகர் மரணம்.
  • மௌரியர்கள் ஆட்சிக்காலமும் அவர்கள் வம்சமும் அழிகிறது. அதன்பிறகு சுங்க வம்சம் வருகிறது.
  • கிபி முதல் நூற்றாண்டில் குஷானர்கள் வருகிறார்கள்.
  • கிபி240 ல் பாடலிபுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, குப்த பேரரசு தொடங்குகிறது.
  • சந்திர குபதர்களும், சமுத்திர குப்தர்களும் தொடர்ந்து ஆட்சி செய்கிறார்கள்.
  • கிபி450களில் ஹீனர்கள் படையெடுப்பு நடைபெற்றது.
  • கிபி 600களில் ஹர்ஷவர்தர் ஆட்சி
  • கிபி1000 முகமது கஜினி படையெடுப்பு தொடங்குகிறது.
  • கிபி1200களில் கோரி வம்சத்தார் ஆட்சிக்கு வருகிறார்.
  • கிபி1221 செங்கிஸ்கான் என்ற பெரும்புயல் வந்து பஞ்சாப்பையெல்லாம் வேட்டையாடி சென்றது.
  • கிபி1310 அலாவுதீன் கில்ஜி வருகைக்கு பிறகு கில்ஜிக்களின் காலம்.
  • கிபி1345களில் முகமது பின் துக்ளக் காலம்
  • கிபி1450களில் லோடிக்களின் காலம்
  • கிபி1526 பாபர் வருகை மொகலாயர் ஆட்சிக்காலம் தொடக்கம். பாபர், ஹீமாயுன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப், பெயர் தெரியாத, ஓட்டையாண்டி ராஜ்ஜியம் நடத்திய கொஞ்சம் மொகலாய அரசர்கள், பிரிட்டிஷார் வந்து முடித்து வைத்த இரண்டாம் பகதூர்ஷா என ஒரு 300 ஆன்டுகாலம், மொகலாயர் சாம்ராஜ்ஜியம்.
  • கிபி1757-1857 கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலம்
  • கிபி1857 -1947 பிரிட்டிஷ் நேரடி ஆட்சி.
  • கிபி1947லிருந்து 2010 வரை இந்தியா குடியரசாக இருந்து வருகிறது. வேதகால நாகரிகத்தில் சமிதியிலும், சபாவிலும் மக்களுக்கு என்ன பிரதிநிதித்துவம் இருந்ததோ, அந்த அளவுக்கும் குறைவாக மக்கள் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது. 

Histroy


கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்.

விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு.

பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு).

காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு).

பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு).

பிரத்விராஜ விஜயா - சந்த் பர்தோலி - (சௌகான் வரலாறு).

மதுரா விஜயா - கங்கா தேவி.

அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்.

பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு).

பாரவி - இராதார்ச்சுனியம்.

சூத்திரகர் - மிருச்சகடிகம்.

ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்.

வராகமிகிரர் - மிருகத்சம்கிதை.

வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

அமரசிம்மர் - அமரகோசம்.

பாரவி - கிராதார்ஜீனியம்.

தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்.

மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்.

வியாசர் - மகாபாரதம்.

திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி.

வால்மீகி - இராமாயணம்.

புகழேந்தி - நளவெண்பா.

சேக்கிழார் - பெரிய புராணம்.

செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி.

ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்.

அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்.

பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்.

ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்.

காமசூத்திரம் - வாத்சாயனார்.

இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்.

பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா.

இராஜதரங்கனி - கல்ஹாணர்.

ஷாநாமா - பிர்தௌசி.

கீதகோவிந்தம் - ஜெயதேவர்.

யுவான்சுவாங் - சியூக்கி.

நூல் ஆசிரியர் :------

துசக்-இ-பாபரி -பாபர்.

தாரிக்-தி-ரஷீத் -மிர்சா.

ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்.

தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்.

காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்.

தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்.

அக்பர் நாமா -அபுல் பாசல்.

அயினி அக்பரி -அபுல் பாசல்.

தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்.

தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்.

இக்பால் நாமா -முகபத்கான்.

பாதுஷா நாமா -அப்துல் அமீது.

ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்.

முண்டகப் உல் ஓபாப் -காபீகான்.

கல்வெட்டுகளும், பட்டயங்களும் :----

அசோகரின் பாறை கல்வெட்டுகள் - மௌரியர் வரலாறு.

ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலர்.

ஜீனாகத் கல்வெட்டு - ருத்ரதாமன்.

மாண்டசோர் கல்வெட்டு - யகோதர்மன்.

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்.

ஹய்ஹோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.

உத்திரமேரூர் கல்வெட்டு - பராந்தக சோழன்.

பாதபள்ளி செப்பேடு கல்வெட்டு - முதலாம் ஹரிகரன்.

ஸ்ரீரங்கம் செப்பேடு கல்வெட்டு - இரண்டாம் தேவராயர்.

உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன்.

உத்திரமேரூர் கல்வெட்டு - சோழர் கிராமசபை.

ஹய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி.

அலகாபாத் கல்வெட்டு - சமுத்திர குப்தர்.

நாணயங்கள் :------

தினார் - குப்தர் தங்க நாணயங்கள்.

கச்சா - இராம குப்தர்.

டாங்கா ஜிட்டால் - டெல்லி சுல்தான்கள்.

பகோடா - விஜய நகர நாணயம்.

டாம் - அக்பர் நாணயம்.

நினைவுச் சின்னங்கள் :--------

பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு.

அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு.

மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு.

பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு.

குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு.

ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு.

கட்டிடக்கலை :------

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி).

எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்.

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி).

எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்.

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி).

எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்.

4. மண்டபக் கோயில்கள்.

எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்.

5. பிறவகைக் கோயில்:-
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்.

காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்.

மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்.

காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்.

மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்.

தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்.

ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்.

அயல் நாட்டவர் :-------

மெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்).

தாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்).

பிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்).

பாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்).

யுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்).

அல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது).

இபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்).

சங்கக் காலம்:----------

சேரநாடு :----

கொங்கணக் கடற்கரைக்கு தெற்கேயுள்ள மேற்குக் கடற்கரைப் பகுதியும், கொங்கு நாடும் இணைந்த பகுதி சேரநாடு.

தலைநகர் வஞ்சி- அல்லது கரூர்.

சின்னம் - வில்.

தலைசிறந்த மன்னன் - செங்குட்டுவன்.

மாலை - பனம் பூ.

சோழ நாடு :--------

தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கியது சோழ நாடாகும்.

தலைநகர்- காவிரிப்பூம்பட்டினம்.

சின்னம் - புலி.

தலைசிறந்த மன்னன் - கரிகால சோழன்.

மாலை - அத்தி மாலை.

பாண்டிய நாடு :--------

மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டது.

தலைநகர் - மதுரை.

சின்னம் - மீன்

தலைசிறந்த மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

மாலை - வேப்ப மாலை.

அரச வம்சத்தை தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள் :---------

பல்லவ வம்சம் - சிம்ம விஷ்ணு, நந்தி வர்மன்-2.

சோழ வம்சம் - விஜயாலயன், குலோத்துங்கன்-1.

பிரத்திஹாரர்கள் - நாகபட்டா-1, கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2.

ராஷ்டிரகூடர் வம்சம் - நந்தி துர்கா, கரகா-2.

அடிமை வம்சம் - குத்புதீன் ஐபக், சைகுபாத்.

கில்ஜி வம்சம் - ஜலாலுதீன், குஸ்ரோகான்.

துக்ளக் வம்சம் - கியாசுதின் துக்ளக், நசுருதின் முகமது.

சையது வம்சம் - கிசர்கான், அலாவுதீன் ஆலம் ஷா.

லோடி வம்சம் - பகலூல்கான் லோடி, இப்ராஹிம் லோடி.

மொகலாய வம்சம் - பாபர், இரண்டாம் பகதூர்ஷா.

நந்தவம்சம் - மகாபத்மா நந்தர் , தனநந்தர்.

முக்கிய போர்கள் :--------

1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.௩௨௬.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்த மனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.

2. செலியூகசுக்கு எதிராக போர்:-

செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.

3. கலிங்கப்போர் கி.மு.261:-

அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.

4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713:-

முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.

5. தானேசர் போர் கி.பி. 1014:-

முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல கோயில்களை அழித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.

6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175:-

முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.

7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191:-

அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.

8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192:-

முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.

9. செங்கிஸ்கான் படையெடுப்பு:-

செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.

10. தைமூர் படையெடுப்பு:-

தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.

11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526:-

பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.

12. கன்வா போர் கி.பி.1527:-

பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.

13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556:-

அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.

14. தலைக்கோட்டை போர் கி.பி.1565:-

விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.

15. ஹல்திகாட் போர் கி.பி.1576:-

மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.

16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739:-

ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748:-

முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.

18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54:-

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.

19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63:-

வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.

20. பிளாசிப் போர் கி.பி. 1757:-

ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.

21. வந்தவாசி போர் கி.பி.1760:-

பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.

22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761:-

மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.

23. பக்சார் போர் கி.பி.1764:-

சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69:-

ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.

25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84.

ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.

26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92.

பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.

27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799:-

ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.

28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18:-

மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819.:-

ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.

30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819:-

ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.

31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:-

ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ர வானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.

32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49:-

ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.

33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857:-

ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் :--------

கி.மு :---

1500 - சிந்து சமவெளி நாகரிகம்.

1000 - ஆரியர்கள் காலம்.

550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன.

554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

518 - பாரசீகர்களின் ஆதிக்கம்.

326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.

321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்.

232 - அசோகரின் ஆட்சிகாலம்.

கி.பி :----

78 - சக வருடம் தொடங்கியது.

98-117 - கனிஷ்கரின் காலம்.

320 - முதலாம் சந்திரகுப்தர்.

606 - ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்.

609 - சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்.

622 - ஹஜிரா வருட தொடக்கம்.

711 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்.

985 - ராஜ ராஜ சோழனின் காலம்.

1026 - முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்.

1992 - முதலாம் தரேயின் போர்.

1191 - இரண்டாம் தரேயின் போர்.

1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்.

1232 - குதுப்மினார் கட்டப்பட்டது.

1290 - கில்ஜி வம்சம்.

1298 - மார்கோபோலோ இந்தியா வருகை.

1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.

1424 - டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது.

1451 - லோடிவம்சம்.

1489 - அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது.

1496 - குருநானக் பிறப்பு.

1498 - வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்.

1526 - முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்.

1530 - ஹூமாயூன் மன்னரானார்.

1539 - குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்.

1556 - ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்.

1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்.

1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது.

1576 - மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்

1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்.

1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது.

1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.

1605 - மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்

1606 - குரு அர்ஜூன் சிங் மறைவு.

1627 - ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு.

1631 - ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.

1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.

1658 - ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.

1664 - சிவாஜி அரியணை ஏறினார்.

1666 - குரு கோவிந்த சிங் பிறந்தார்.

1675 - சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.

1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1707 - முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.

1708 - சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.

1720 - பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.

1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.

1757 - பிளாசி போர் நடைபெற்றது.

1760 - வந்தவாசிப் போர்.

1761 - மூன்றாம் பானிபட் போர்.

1764 - பக்ஸர் போர்.

1767 - முதல் மைசூர் போர்.

1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.

1780 - சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.

1784 - பிட் இந்திய சட்டம்.

1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.

1796 - மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.

1799 - நான்காம் மைசூர் போர்.

1803 - மராத்தியப் போர்.

1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.

1839 - ரஞ்சித் சிங் இறப்பு.

1845-46 - ஆங்கிலோ சீக்கியப் போர்.

1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.

1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.

1857 - ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.

1858 - ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.

1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.

1899 - கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.

1905 - முதல் வங்கப் பிரிவினை.

1906 - முஸ்லீம் லீக் உதயம்.

1908 - செய்தித்தாள் சட்டம்.

1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.

1915 - இந்திய ராணுவச் சட்டம்.

1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.

1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.

1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.

1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.

1925 - சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.

1928 - சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.

1929 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.

1930 - சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.

1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.

1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.

1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.

1935 - இந்திய அரசுச் சட்டம்.

1940 - இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.

1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.

1943 - வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

1946 - கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.

1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது. 

தமிழ் வருடங்களின் பெயர்கள்


1- பிரபவ     (1987-1988) 
2- விபவ (1988-1989)
3- சுக்கில (1989-1990)
4- பிரமோதூத (1990-1991)
5- பிரஜோத்பத்தி (1991-1992)
6- ஆங்கீரஸ (1992-1993)
7- ஸ்ரீமுக (1993-1994)
8- பவ (1994-1995)
9- யுவ (1995-1996)
10- தாது (1996-1997)
11- ஈஸ்வர (1997-1998)
12- வெகுதான்ய (1998-1999)
13- பிரமாதி (1999-2000)
14- விக்கிரம (2000-2001)
15- விஷு (2001-2002)
16- சித்ரபானு (2002-2003)
17- சுபானு (2003-2003)
18- தாரண (2004-2005)
19- பார்த்திப (2005-2006)
20- விய (2006-2007)
21- ஸ்ர்வசித்து (2007-2008)
22- ஸ்ர்வாரி (2008-2009)
23- விரோதி (2009-2010)
24- விக்ருதி (2010-2011)
25- கர (2011-2012)
26- நந்தன (2012-2013)
27- விஜய (2013-2014)
28- ஜய (2014-2015)
29- மன்மத (2015-2016)
30- துன்முகி (2016-2017)
31- ஹேவிளம்பி (1957-1958, 2017-2018)
32- விளம்பி (2018-2019)
33- விகாரி (2019-2020)
34- சார்வரி (2020-2021)
35- பிலவ (2021-2022)
36- சுபகிருது (2022-2023)
37- ஸோபகிருது (2023-2024)
38- குரோதி (2024-2025)
39- விஸ்வவசு (2025-2026)
40- பராபவ (2026-2027)
41- பிலவங்க (2027-2028)
42- கீலக (2028-2029)
43- சௌமிய (2029-2030)
44- ஸாதரண (2030-2031)
45- விரோதிகிருது (2031-2032)
46- பரிதாபி (2032-2033)
47- பிரமாதீஸ (2033-2034)
48- ஆனந்த (2034-2035)
49- ராக்ஷஸ (2035-2036)
50- நள (2036-2037)
51- பிங்கள (2037-2038)
52- களயுக்தி (2038-2039)
53- சித்தார்த்தி (2039-2040) 
54- ரூத்ரி (2040-2041)
55- துன்மதி (2041-2042)
56- துந்துபி (2042-2043)
57- ருத்ரகாரி (2043-2044)
58- ரக்தாக்ஷி (2044-2045)
59- குரோதன (2045-2046)
60- அக்ஷய (2046-2047)

 தமிழ் மாதங்கள்
  • சித்திரை
  • வைகாசி
  • ஆனி
  • ஆடி
  • ஆவணி
  • புரட்டாசி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மார்கழி
  • தை
  • மாசி
  • பங்குனி
நாட்கள்
  • ஞாயிறு
  • திங்கள்
  • செவ்வாய்
  • புதன்
  • வியாழன்
  • வெள்ளி
  • சனி
 திதிகள்
  • பிரதமை
  • த்விதை
  • திரிதியை
  • சதுர்த்தி
  • பஞ்சமி
  • சஷ்டி
  • சப்தமி
  • அஷ்டமி
  • நவமி
  • தசமி
  • ஏகாதசி
  • த்வாதசி
  • த்ரோதசி
  • சதுர்தசி
  • பௌர்ணமி (அ) அமாவாசை
கால அளவுகள்
  • 1 நாழிகை = 24 நிமிடம்
  • 2.5 நாழிகை = 1 மணி 
  • 3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
  • 7.5 நாழிகை = 1 ஜாமம்
  • ஜாமம் = 1 நாள், பகல் +இரவு சேர்ந்து
  • 7 நாள் = 1 வாரம்
  • 2 பக்ஷம் = 1 மாதம்
  • 2 மாதம் = 1 ருது /பருவம்
  • 3 ருது /பருவம் = 1 அயனம்
  • 2 அயனம் = 1 வருடம்


    தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - காலப்பட்டியல்


    முதலாம் பாண்டியப் பேரரசர்கள் /First pANTyA Kings

    • 590 -620 கடுங்கோன் / kaTugkOn 
    • 620 - 645 மாறவர்மன் அவனி சூளாமணி / mARavarman- avani cULAmaNi 
    • 645 - 670 அரிகேசரி பாராங்குசன் / arikEci pArAgkucan 
    • 700 - 730 கோச்சடையன் ரணதீரன் / kOccaTaiyan raNathIran 
    • 730 - 765 முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் / mARavarman irAjacimman I 
    • 765 - 815 பராந்தக நெடுஞ்சடையன் / parAn-taka n-eTujcaTaiyan 
    • 815 - 835 முதலாம் வரகுணன் / varakuNan I 
    • 835 -862 சீமாற சீவல்லபன் / cImAra cIvallapan 
    • 862 - 880 இரண்டாம் வரகுணன் / varakuNan II 
    • 885 - 895 பராந்தக வீர நாராயணன் / parAn-taka vIra nArAyaNan 
    • 905 - 920 இரண்டாம் இராஜசிம்மன் / irAjacimman II 
    • .......... வீரபாண்டியன் / vIrapANTiyan
    • 1190 - 1216 சடையவர்மன் குலசேகரன் / caTaiyavarman kulacEkaran 
    • 1216 - 1238 முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் /mARavarman cuntarapANTiyan I 
    • 1238 - 1251 இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் / mARavarman cuntarapANTiyan II 
    • 1268 -1271 முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் / caTaiyavarman cuntarapANTiyan I
    • 1253 -1274 சடையவர்மன் வீரபாண்டியன் / cataiyavarman vIrapANTiyan 
    • 1268 - 1310 மாறவர்ம குலசேகர பாண்டியன் / mARavarma kulacEkara pANTiyan 

    பிற்காலப் பல்லவர்கள் (Later pallavAs)

    • .......... மூன்றாம் சிம்மவர்மன் / cimmavarman III 
    • 575 - 610 சிம்ம விஷ்ணுவர்மன் / cimma vishnuvarman 
    • 610 - 630 முதலாம் மகேந்திரவர்மன் / makEntiravarman I 
    • 630 - 668 முதலாம் நரசிம்மவர்மன் / n-arasimmavarman I 
    • 668 - 669 இரண்டாம் மகேந்திரவர்மன் / n-arasimmavarman II 
    • 669 - 690 முதலாம் பரமேசுவரவர்மன் / paramEcuvaravarman I
    • 690 -728 இரண்டாம் நரசிம்மவர்மன் / n-aracimmavarman II 
    • 729 - 731 இரண்டாம் பரமேசுவரன் / paramEcuvaran II 
    • 731 - 796 இரண்டாம் நந்திவர்மன் / n-an-tivarman II
    • 796 - 846 நந்திவர்மன் / n-an-tivarman 
    • 846 - 869 மூன்றாம் நந்திவர்மன் / n-antivarman III
    • 869 - 913 நிருபதுங்கவர்மன் / nirupatugkavarman 
    • ......... அபராஜிதவர்மன் /aparAjitavarman 

    சோழர் கால அரசர்கள் (cOzA kings )

    • 907 - 990 முதலாம் பராந்தக சோழன் /parAn-taka cOzan I 
    • 956 - 957 கண்டராதித்தன் / kaNTarAttitan 
    • 956 - 957 அரிஞ்சிய சோழன் / arijciya cOzan 
    • ....... உத்தம சோழன் / uttama cOzan 
    • ....... சுந்தர சோழன் / cuntara cOzan 
    • 985 - 1014 முதலாம் இராஜராஜன் / irAjarAjan I 
    • 1012 - 1044 முதலாம் இராஜேந்திரன் / irAjEntiran I 
    • 1070 - 1120 முதலாம் குலோத்துங்கன் / kulOttugkan I 
    • 1118 - 1132 விக்கிரம சோழன் / vikkirama cOzan 
    • 1133 - 1150 இரண்டாம் குலோத்துங்கன் / kulOttugkan II 
    • 1150 - 1163 இரண்டாம் இராஜராஜன் / irAjarAjan II 
    • 1163 - 1179 மூன்றாம் இராஜராஜன் / irAjarAjan III 
    • 1179 - 1216 மூன்றாம் குலோத்துங்கன் / kulOttugkan III 

    முகமதிய அரசர்கள் (Mohammadan Kings)

    • 1296 -1315 அலாவுதீன் கில்ஜி -மாலிக்காபூர் / allAvutin kilji - mAlikkapUr 
    • 1317 - முபாரக்ஷா / குஸ்ருகான் / mupAarak shah - kusrukAN 
    • 1323 கியாசுதீன் துக்ளக் / kiyAcutIn tukLak 

    மதுரை சுல்தானியர்கள் - 1338 - 1378 /Sultans of Madurai

    • . .. ஜலாலுதீன் அசன்ஷா / jalAlutIn acanshah
    • .... குத்புதீன் / kutputIn 
    • .... கியாஸ் உத்தீன் / kiyAs uttIn 
    • .... நசீர் உத்தீன் (1341 - 1356 ) / nacIr uttIn 
    • .... அடில்ஷா (1356 - 1361 ) / atilshah 
    • .... பக்ருதீன் முபாரக் ஷா (1361 -1370) / pakrutIn mupArak shah 
    • ... அலாவுதீன் சிக்கந்தர் (1370 - 1377 ) / alavutIn cikkantar 

    விஜய நகர அரசர்கள் 1336 - 1565 / Vijayanakar Kings

    • ... சங்கம வமிசம் (1336 - 1672) / canka vamsan /dynasty
    • ஏகாம்பர நாதர் (1321 -1339) / EkAmpara nAtar 
    • ஹரிஹரர், புக்கர் / harihara pukkar 
    • ... சாஜவ வமிசம் (1485 - 1505) / cAjava vamsam /dynasty 
    • .... துளுவ வமிசம் (1505 - 1615) / tuLuva vamsam /dynasty 
    • ... அரவீடு வமிசம் (1565 - 1672 ) / aravITu vamsam /dynasty 

    மதுரை நாயக்கர்கள் / n-Ayakkars of Madurai

    • ...... நாமக நாயக்கர் /n-Amaka n-Ayakkar 
    • 1529 -1564 விஸ்வநாத நாயக்கர் / visvan-Ata n-Ayakkar
    • 1564 - 1572 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I 
    • 1572 - 1595 வீரப்ப நாயக்கர் / vIrappa n-Ayakkar 
    • 1595 - 1601 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II
    • 1601 - 1609 முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் / mutu krishNappa n-Ayakkar 
    • 1609 - 1623 முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar 
    • 1623 - 1659 திருமலை நாயக்கர் / tirumalai n-Ayakkar 
    • 1659 இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar II 
    • 1659 - 1682 சொக்கநாத நாயக்கர் / cokkanAta n-Ayakkar 
    • 1682 - 1689 மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் / mutu vIrappa n-Ayakkar III 
    • 1689 - 1706 இராணி மங்கம்மாள் / irANi magkammAL 
    • 1706 - 1732 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் / vijayaragka cokkan-Ata n-Ayakkar 

    தஞ்சை நாயக்கர்கள் /n-Ayakkars of Tanjore

    • 1532 - 1560 செவ்வப்ப நாயக்கர் / cevvappa n-Ayakkar 
    • 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர் / accutappa n-Ayakkar 
    • 1600 - 1632 இரகுநாத நாயக்கர் / irakun-Ata n-Ayakkar 
    • 1633 - 1673 விஜயராகவ நாயக்கர் / vijayarAkava n-Ayakkar 

    செஞ்சி நாயக்கர்கள் / n-Ayakkars of cejci

    • 1526 - 1541 வையப்ப நாயக்கர் / vaiyappa n-Ayakkar 
    • 1541 - 1544 பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் / petta krishNappa n-Ayakkar 
    • 1541 - 1567 சூரப்ப நாயக்கர் / cUrappa n-Ayakkar 
    • 1567 - 1575 முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar I 
    • 1580 -1593 வையப்ப கிருஷ்ணப்ப கொண்டம நாயக்கர் / vaiyappa krishNappa koNTama n-Ayakakr 
    • ...... இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் / krishNappa n-Ayakkar II 

    இராமநாதபுரம் சேதுபதிகள் / cEtupatis of irAmanAtapuram

    • 1605 - 1622 சடைக்கத் தேவர் / caTaikkat tEvar 
    • 1622 - 1636 கூத்தன் சேதுபதி / cuttan cEtupati 
    • 1636 - 1645 இரண்டாம் சடைக்கத் தேவர் / caTaikkat tEvar II 
    • 1645 - 1670 இரகுநாத சேதுபதி / irakun-Ata cEtupati 
    • .... சூரியத் தேவர், அந்தணத் தேவர் / cUriyat tEvar, an-taNat tEvar 
    • .... இரகுநாதத் தேவர் (கிழவன் சேதுபதி ) / irakunAtat tEvar - kizavan cEtupati 
    • 1700 - 1720 விஜயரகுநாத சேதுபதி / vijayarakunAta cEtupati 
    • .... பவானி சங்கரத் தேவர் சேதுபதி / pavAni cankarat tEvar cEtupati 
    • 1720 - 1803 கட்டப்ப தேவர் / kaTTappa tEvar,
    • சிவகுமார முத்து / civakumAra mutu,
    • விஜய ரகுநாதத் தேவர் / vijaya rakunAtat tEvar 
    • ... ரஞ்சத் தேவர் / rajcat tEvar , செல்லத் தேவர் / cellat tEvar , 
    • முத்து ராமலிங்கத் தேவர் /mutu irAmaligkat tEvar,
    • .... மங்களேசுவர நாச்சியார், அண்ணாசாமித் தேவர்

    தஞ்சை மராட்டியர்கள் / marAttiyars of Tanjore

    • 1675 - 1684 வெங்கோஜி / vegkOji 
    • 1694 -1712 ஷாஜி /shAji 
    • 1712 - 1728 சரபோஜி /carapOji 
    • 1728 - 1736 துக்கோஜி / tukkOji 
    • 1737 பாபா சாகேப் / pApa cAkEp, காட்டு ராஜா (ஷாஜி) / kATTu rAjA cAji
    • 1738 சையாஜி / caiyAji 
    • 1739 - 1763 பிரதாப் சிங் / pratAp cig 
    • 1763 - 1787 துளஜாஜி / tuLajaji 
    • 1787 - 1798 அமர்சிங் / amarcig 
    • 1798 - 1833 இரண்டாம் சரபோஜி / carpOji II 
    • 1833 - 1855 சிவாஜி /civAji 

    புதுக்கோட்டை தொண்டைமான்கள் / toNTaimAns of putukkOTTai

    • 1730 - 1769 விஜய ரகுநாத தொண்டைமான் / vijaya rakunAtat toNTaimAn 
    • 1769 - 1789 ராய ரகுநாதத் தொண்டைமான் / rAya rakunAtat toNTaimAn 
    • 1807 - 1825 ராஜ விஜய ரகுநாத ராயத் தொண்டைமான் / rAja vijaya rakun-Ata rAyat toNTaimAn 
    • 1825 - 1839 ராஜா ரகுநாத தொண்டைமான் பகதூர் / rAjA rakunAta toNTaimAn pakatUr 
    • 1839 - 1886 ராஜா ராமச்சந்திரத் தொண்டைமான் பகதூர் / rAja ramaccantira toNTaimAn pakatUr 
    • 1886 - 1928 மார்த்தாண்ட பைரவத் தொண்¨டாமன் பகதூர் / mArttANTa pairavat toNTaimAn pakatUr 
    • 1928 - 1948 ராஜா ராஜகோபாலத் தொண்டைமான் / rAja rAjakOpAlat toNTaimAn 

     "கஜினி முகமது" இறந்த பின்னர் படையெடுத்து சென்று "கஜினி" நகரை அழித்து தரைமட்டமாக்கிய "அலாவுதீன் ஹூசேன்" என்ற சுல்தானின் மருமகனான " கோரி முகமது" யின் இந்திய படையெடுப்பில் வெற்றி கண்டு திரும்பி செல்லும் போது தன் சார்பாக டெல்லி அரியணையில் அமர்த்தப்பட்டவர் "குத்புதீன் அய்பெக்" எனும் அடிமை. இவர் தன் புத்திசாலி தனத்தாலும் திறமையாலும் மன்னரின் நம்பிக்கையை பெற்று படிப்படியாக பிரதம தளபதியாக உயர்ந்த துருக்கிய இனத்தவராவார். இவரே இந்தியாவில் அடிமை பரம்பரையில் வந்த முதல் அரசர். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற "குதுப்மினாரை" கட்டிய பெருமை இவரையே சாரும்.

    [ பல முறை தோல்விக்கு பின்னர் வெற்றியை கண்டதாக சொல்லப்படும்  "கஜினி முகமது" உண்மையில் ஒரு முறை கூட போரில் தோற்கவில்லையாம். இந்தியாவை நோக்கி இவை முதல் முறை படையெடுத்து வந்த ஆண்டு கி.பி 1000 .   ஒவ்வொரு முறை இந்தியாவை நோக்கி படையெடுத்து வரும் போது எதிர்க்கும் படைகளை துவம்சம் செய்து அந்நாட்டை சூறையாடி அங்குள்ள முத்து, ரத்தினம், பவளம், வைரம், வைடூரியம், தங்கம் வெள்ளி, பட்டாடைகள்  மற்றும் கலை நயம் மிக்க பொருட்கள் என அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கமாம். இக்கொடூர சூறையாடல் வருடத்திற்கொரு முறை என 17 முறை நடந்திருக்கிறது. கஜினி முகமது போரில் வெற்றி கண்டதாக சொல்லப்படும் 18 வது முறை அதாவது கி.பி.1025 -ல்  குறி வைத்தது குஜராத்தின் தென் கோடியில்  அமைந்திருந்த நாடெங்கும் புகழ் பரவிக்கிடந்த "சோமநாதர் என்ற பெயரில் வழிபடப்பட்ட சிவன் கோவில் மீது. இக்கோவிலின் சிறப்பம்சமே சிவலிங்கம் அந்தரத்தில் மிதக்கும் படி அமைந்திருந்தது தான்.  இக்கோவிலை சூறையாடும் போது அர்ச்சகர்கள், ஊர் மக்கள் படைவீரர்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரதிற்க்கும்  மேல் இருக்குமாம்.  சோமநாதர் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் எடை மட்டும் சுமார் ஆறு டன் இருக்கும்  என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.  செல்வங்களை கொள்ளையடித்ததோடு நிற்காமல் சிவலிங்கம் உட்ப்பட மொத்த கோவிலையும் உருத்தெரியாமல் அழித்து விட்டு சென்றுள்ளனர் அந்த வெறி பிடித்த ஓநாய்கள். இதற்கு பின்னர் கஜினி இந்தியாவிற்கு வரவில்லை. ஆக கஜினியின் ஒவ்வொரு படையெடுப்பும் வெற்றி என்பதே வரலாற்று உண்மை.]  

             குதிரை பயிற்சியின் போது நடந்த ஒரு விபத்தில் "குத்புதீன்" மரணமடைந்து விட அதனை தொடர்ந்து ஆட்சியமைத்த "ஆராம்ஷா" வின் ஆட்சியமைப்பு சரியில்லாமல் போக குத்புதீனின் மருமகனான "இல்தூத்மிஷ்" என்பவர் ஆட்சியை கைப்பற்றினார். இவரும் அடிமையாக எடுத்து வளர்க்கப்பட்டு தளபதியாக உயர்ந்தவர் தான். பின்னாளில் இல்தூத்மிஷ் தான் "குதுப்மினாரை" முழுமையாக கட்டிமுடித்தார். இவரின் இருபத்தாறு ஆண்டு ஆட்சிக்கு பின்னர் அரியணை ஏறிய "ருக்னுதீன் பிரோஸ்" குடி, கும்மாளம், கூத்து என நாட்டை சீரழிக்க ஆட்சி இல்தூத்மிஷ்-ன் மகளான "ரஸ்யா பேகம்" ற்கு கை மாறியது. அரியணை ஏறி ஆட்சியமைக்க ஏதுவான அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருந்தும் "ரஸ்யா' டெல்லியை ஆண்டது வெறும் மூன்று வருடங்கள் தான். ஒரு பெண் தங்களை ஆள்வதா என்று கூடவே இருந்த துரோகிகளால் தீர்த்துக்கட்டப்பட்டார் "டெல்லியை முதலும் கடைசியுமாய் ஆண்ட பெண் சுல்தான் என்று பெயர் பெற்ற "ரஸ்யா பேகம்".

    ரஸ்யா பேகம் கொலையுண்ட பிறகு ஆறு வருடத்தில் இருவர் ஆட்சிப்பொறுப்பில் ஏறி நாட்டை ஏறக்குறைய சாக்கடையாக்கினார்கள். அதற்கு பின்னர் அரியணை ஏறியவர் ரஸ்யா பேகத்தின் இளைய சகோதரர் "நஸூருதீன் மகமூத்". இவரை "மலரை போன்ற மென்மையான குணமுடைய சுல்தான்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த தவறும் செய்யாமல் எளிமையாக வாழ்ந்த ஏகபத்தினி விரதன். புனித குர்-ஆன் நூலை தன் கையால் அழகாக எழுதி அதனை விற்று அதில் வரும் வருமானத்தை தன் சொந்த செலவுக்காக பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இவர் டெல்லியை ஆண்டது இருபதாண்டு காலங்கள்.

    சூழ்ச்சிகளும், சூட்சமங்களும், எதிரிகளும், துரோகிகளும் கண்ணுக்கு தெரியாத மாயைப்போல  சுற்றிப்படர்ந்திருக்கும் நாட்டில் ஒரு மென்மையான மன்னரால் எப்படி இருபதாண்டு காலம் ஆட்சி  நடத்தியிருக்க முடியும், இக்கால கட்டத்தில் ஒரு போர் கூடவா நடை பெறவில்லை?, ஒருவர் கூடவா டெல்லியை நோக்கி படையெடுத்து வரவில்லை? என்று உங்களில் பலரும் கேள்வி எழுப்பலாம். ஆம் !! உங்கள் கேள்வியும் நியாமானதே. இந்த இருபதாண்டு காலமும் "மலரையொத்த மேன்மேயான மன்னரை பொத்தி பாதுகாத்தது "பால்பன்" என்ற இரும்புக்கரம். நஸூருதீனுக்கு வாரிசு இல்லாத காரணத்தால் பல்பனையே அடுத்த வாரிசாக நியமித்தார். பால்பன் சுல்தான் நஸூருதீனுக்கு மாமனாரும் கூட. இவரும் அடிமையாக வந்து சேர்ந்தவர் தான். அடிமை அரசர்களிலேயே மிகவும் புகழ் பெற்றவர் "பல்பன்" தான் எனலாம். இவர் ஆண்ட நாற்பதாண்டு காலமும் டெல்லியின் புகழ் உயர்ந்தோங்கி நின்றது. மாமன்னர் "பல்பன்" ஆட்சிக்கு பின்னர் சிம்மாசனம் ஏறிய அவரின் பேரன் ஆட்சியை கவனிக்காமல் ஆடையிழந்து அழகிகளுடன் அந்தபுரத்தில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து கொள்ள கொஞ்ச காலத்தில் நாட்டில் கோஷ்டி சண்டைகள் துவங்கின. அச்சயமயத்தில் ஓங்கி நின்றது "ஆப்கானிய கில்ஜி" பிரபுக்களின் கை. இது தான் தக்க சமயமென்று "ஜிலாலுதீன் பிரோஷ் ஷா" என்ற கில்ஜி பிரபு படைதிரட்டி வந்து டெல்லியை கைப்பற்றினார். அத்துடன் அடிமை சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.


    13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் 
    தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது 
    அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் 
    பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார். இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும். இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது. மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். 


    ஷேர்கானின் இறப்பிற்கு பின்மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது 
    வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது. 

    இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை. அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து 

    வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் 
    திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான். அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் 

    மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம். 

    Sunday, September 4, 2011

    ஆயக்கலைகள் 64

    http://ularuvaayan.blogspot.com/2011/08/64.html

    1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
    2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
    3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
    4. மறைநூல் (வேதம்);
    5. தொன்மம் (புராணம்);
    6. இலக்கணம் (வியாகரணம்);
    7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
    8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
    9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
    10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
    11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
    12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
    13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
    14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
    15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
    16. மறவனப்பு (இதிகாசம்);
    17. வனப்பு (காவியம்);
    18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
    19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
    20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
    21. பாட்டு (கீதம்);
    22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
    23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
    24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
    25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
    26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
    27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
    28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
    29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
    30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
    31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
    34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
    35. மல்லம் (மல்யுத்தம்);
    36. கவர்ச்சி (ஆகருடணம்);
    37. ஓட்டுகை (உச்சாடணம்);
    38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
    39. காமம் (காம சாஸ்திரம்);
    40. மயக்குநூல் (மோகனம்);
    41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
    42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
    43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
    44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
    45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
    46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
    47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
    48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
    49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
    50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
    51. உடற் (தேகப்) பயிற்சி;
    52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
    54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
    55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
    56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
    57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
    58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
    59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
    60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
    61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
    62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
    63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
    64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

    Wednesday, August 24, 2011

    இன்னும் விடியாத நள்ளிரவுச்சுதந்திரம்:

    நாம் தவிர்க்கவோ விலத்தவோ நினைத்தாலும் தவிர்க்கமுடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல் சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது.அதுதான் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படும் நிலப்பரப்பு. இந்தவாரம் அதன் அறுபத்திநான்காவது சுதந்திரதினம் ஓகஸ்ட்15ம் நாள் வந்துள்ளது. பிரித்தானிய காலனிஆட்சியாளர்களின் வருகை இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும், சிறியதேசங்களாகவும் சிதறிக்கிடந்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் தமது நிர்வாகதேவைக்காக ஒன்றிணைத்தது ஆகும்.
    இந்தியா என்பது அதற்கு முன்னர் ஒருபோதுமே ஒரே தேசமாக இருந்தது கிடையாது. இந்தியா எங்கும் மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு கீழேயும் விளைந்துகிடந்த பொருட்கள் காலகாலமாக அந்த நிலப்பரப்பை நோக்க சக்கரவர்த்திகளையும், மன்னர்களையும், கடற்பயணக்காரர்களையும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. வாசனைத்திரவியங்களும்,வைரங்களும்,பொன்னும் அயலில் இருந்த மொகலாய மன்னர்களை மட்டுமல்லாமல் கொஞ்சம் தூரத்தில் இருந்து பாரசீக சக்கரவர்த்திகளையும், மிக எட்டத்திலிருந்து மகாஅலெக்சாண்டர்களையும் கூட அந்த பாரதத்தை நோக்கி படையுடன் வரவைத்திருந்தது.
    நாடுகளைதேடும் கடற்பயணங்கள் எல்லாம் ஒருவகையில் காலனிகளை உருவாக்கும் முயற்சிகளாகவே ஐரோப்பியரால் நடாத்தப்பட்டன. அந்தவகையில் 1498 போத்துக்கேசிய கடற்பயணக்காரரான வாஸ் கொட காமா வின் கப்பல் இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்துள் வந்தபோதே இந்தியாவுக்கான ஐரோப்பிய காலனி ஆட்சி ஆரம்பித்தது எனலாம். அதன்பின் ஒல்லாந்திய,பிரென்சிய,பிரித்தானிய என்று நீண்ட காலனிஆட்சிகள் நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து இறுதியில் உலகம்முழுதும் காலனி ஆட்சிகள் பொல பொலவென உதிர்ந்துகொண்டிருந்த காரணத்தாலும் இரண்டாம்உலகயுத்தத்தின் சுமையும் பாதிப்புகளும் ஐரோப்பியகாலனி ஆட்சியாளர்களை மிகவும் பாதித்தபடியாலும் போனால்போகிறது என்று பல ஆசியநாடுகளை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.
    அப்படி ஒரு பொழுதுதான் இந்தியாவின் சுதந்திரதினமாக 1947 ஓகஸ்ட் 15ல் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாகவே இந்த இந்தியசுதந்திரம் என்பது சாத்வீகபோராட்டம் ஓன்றினாலே கிடைத்தது என்றும் தனிமனித உண்ணாவிரதமும், கடற்கரையில் உப்பு அள்ளியதாலும்தான் சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராஜ்யம் வெளியேறியதாக ஒரு கருத்துருவாக்கம் காங்கிரஸ் பெருந்தலைகளால் காலகாலமாக செய்யப்பட்டுவருகின்றது. காந்திகள் இந்தியாவை தொடர்ந்து ஆளுவதற்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மீதான இந்த பிம்பங்கள் மிக அவசியமாக அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்திய விடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும், அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.
    இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தினுள் எந்தவிதமான தீவிரமும் கவனிப்பும் காட்டாத காந்தி தென்னாபிரிக்காவில் புகையிரவண்டியில் இருந்து நிறவெறியனால் வெளியே தள்ளி விழுத்தப்பட்ட பின்னரே இந்தியாவின் விடுதலை அரங்கினுள் 1915ல் வருகிறார். ஆனால் அதற்கு பல பத்து வருடங்களுக்கு முன்னரே ஐம்பத்தி ஏழு வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியருக்கு எதிராக உருவான சிப்பாய்க்கலவரத்தின் வீரமிகு புதல்வர்களை பற்றிய விபரங்கள் ஏறத்தாள முழுமையாக மறைக்கப்பட்டேஇருக்கின்றன. அதில் ஒரு உருக்கமான கட்டம் என்னவென்றால் 1857ம் ஆண்டு பாரக்புரி என்ற இடத்தில் பிரித்தானிய ராணுவ அதிகாரியை தாக்கினான் என்பதற்காக மங்கள் பாண்டே என்ற இந்திய வீரனை கைது செய்யும்படி பிரித்தானிய படையில் இருந்த ஒரு இந்திய ஜமேதாருக்கு பிரித்தானிய தளபதி ஜெணரல் கார்சே உத்தரவிட்டான். தனது தேசத்தவன் ஒருவனை கைதுசெய்ய மறுத்த ஜமேதாரும்,மங்கள் பாண்டேயும் 1857ஏப்ரல் 7ம் திகதி ஒன்றாக தூக்கிலிடப்பட்டார்கள்.
    இதன் தொடர்ச்சியாக எழுந்த கலவரத்தை அடக்குவதற்கு பிரத்தியேக படைகளை சீனாவை நோக்கி சென்று கொண்டிருந்த தமது ஐரோப்பியபடைப்பிரிவில் இருந்தும் பெற்றுக்கொண்டு போராடவேண்டிய அளவுக்கு இந்தியர்களின் எழுச்சி எழுந்திருந்தது. இறுதியில் 1858 யூலை 20ம் திகதி குவாலியரில் நடந்த மோதலில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டு குவாலியர்கோட்டை பிரித்தானியரால் மீட்கப்பட்டதுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. வெறும் வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனியை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்று பிரித்தானியர் முடிவெடுத்த தருணம் இதுதான். இந்திய விடுதலைக்கான முதற்புரட்சி,முதல் எதிர்வினையின் மூலவர்களை பற்றிய பக்கங்கள் ஏனோதானோ என்று விரிவாக இல்லாமலும்,மறைத்தும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சுதந்திரதினம் தனது அறுபத்திநான்கு வருடத்தை கடந்து வந்திருக்கிறது.
    இதோ இந்தியாவின் விடுதலையை மானுடவிடுதலையை மானுடவிடுதலையாகவும், சமதர்மவிடுதலையாகவும் கனவுகண்டு அதற்காகவே போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வரலாற்றை பாருங்களேன். எத்தனை உன்னதமானது அவனது வாழ்வு. இருபத்து மூன்று வயதுக்குள் முடிந்துபொன அவனின் வாழ்வு எங்கும் காணப்படும் இலட்சிய உறுதியும், சுதந்திரத்தின்மீதான வாஞ்சையும்தான் இன்றைய இந்தியாவின்விடுதலை. இன்றைக்கும் அவனின் நினைவு தினத்தன்றைக்கு (மார்ச்23) அரசியல்வாதிகள் வந்து மலர்மாலை வைப்பதுடன் அவனின் நினைவுகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சாலெட்ஜ் நதியின் கரையில் இருக்கும் அவனின் நினைவிடம் விடுதலைக்கு போராடும் அனைத்து மக்களுக்கும் ஆயிரம் செய்திகளை சொல்லியபடிக்கு அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது.
    இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பதற்கும் மேலாக அது அனைவரையும் சமனாக நடாத்தும் ஒரு சமதர்ம தேசமாக மலரவேண்டும் என்பதற்பகாக இந்துஸ்தான் சோசலிச குடியரசு ஒன்றை அமைக்கும் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி புரட்சியை விதைத்தவன் அவன். லாஜாலஜபதி ராய் என்ற மிதவாத தலைவருடன் ஆயிரம் முரண்பாடுகளும், கருத்துவேறுபாடுகளும் பகத்சிங்குக்கு இருந்தபோதிலும் லாலாலஜபதிராய் பிரித்தானிய காவல்துறையால் கொல்லப்பட்போது அதற்கு பதில்சொல்ல பகத்சிங் முடிவெடுத்தார். அதற்கு காரணமான அதிகாரி சாண்டிரஸை அழித்த வழக்கில் பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரணதண்டனை கிடைத்தது.
    பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்று நாடு முழுவதிலும் மக்கள் கூட்டமாக தெருக்களில் எழுச்சிகொண்டிருந்தபோது இன்று இந்தியாவின் தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்படும் காந்தி இந்தியாவின் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.(வைசிராய் என்பவர் இங்கிலாந்து ராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளுபவர்).பகத்சிங்கின் தூக்குதண்டனைக்காக பிரித்தானியர் நிர்ணயித்த திகதிக்கு மூன்றுநாட்கள் முன்னதாகவே அந்த தண்டனையை வழங்குங்கள் என்று கேட்டிருந்தார். ஏனென்றால் தூக்குத்தண்டனை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவருக்கு வேறு முக்கிய அலுவல் இருந்ததாம். பகத்சிங் காந்தியையோ அவரின் போராட்டமுறைகளையோ, அவரின் இந்துமத சனாதன முறைகளையோ ஏற்றுக்கொண்வராக இருந்தது கிடையாது. அதனால் அந்த அற்புத மானவீரனின் அறமும்,விடுதலைக்கான பிரகடனமும் பெரிய அளவில் இன்றளவும் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை.
    ஆனால் பகத்சிங் இத்தகைய அங்கீகாரங்களையோ, அடிபணிவுகளையோ ஒருபோதும் பொருட்டாக நினைக்காமல் போரடிய வீரன். அவன் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருந்தவன். 'நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே' என்று தனது இருபத்திஇரண்டு வயத்துக்குள் பிரகடனப்படுத்தியவன் அவன். பகத்சிங்கின் முயற்சிகள் இருபத்து மூன்றுவயத்துக்குள் முடிந்திருக்கலாம்.ஒரு தூக்குகயிற்றின் இறுக்கத்துடன் அவனின் வாழ்வு முடிந்திருக்கலாம். பகத்சிங் தனது இறுதிக்கணம்வரைக்கும் தனது தாயகத்தின்மீதான பற்றுதலை, தனது மண்ணின் மீதான சமரசம் செய்யமுடியாத தாகத்துடனும் இருந்தவன்.அவனுக்கு தூக்குதண்டனை கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்காமல் தன்னை துப்பாக்கியால் சுட்டோ, பீரங்கியால் சுட்டோ கொல்லும்படி கேட்டவர்.
    ஏன் அப்படி கேட்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டபோது தூக்கிலே போட்டால் உயிர் பிரியும்போது தனது கால்கள் தனது தாய்மண்ணில்படாமல் அந்தரத்தில் இருக்கும் என்றும் துப்பாக்கியால் சுட்டால் தனது உயிர்போகும்போது தனது கால்கள் தனது மண்ணை தீண்டியபடியே போகும் என்றும் எந்தவிதமானசலனமும் இல்லாமல் வீரமுடன் கூறியவன் அவன். இந்தியசுதந்திரம் என்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் காந்தியின் முயற்சியாக இருக்கலாம். ஆனால் அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் என்ற முறையிலும், விடுதலைக்காக போராடவேண்டி கட்டாயத்துக்குள் வாழும் ஒரு மக்கள் என்ற முறையிலும் எமக்கு பகத்சிங்கின் வாழ்வுதான் இந்திய சுதந்திரமாக தெரிகிறது. பகத்சிங் போன்ற பல்லாயிரம் வீரர்களினதும்,இந்தியதேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஸ்சந்திரபோசின் படையில் போராடிய பல ஆயிரம் இந்தியவீரர்களின் கனவாகவே எமக்கு இந்தியசுதந்திரம் தெரிகிறது.
    பகத்சிங் தனது சிறையின் சுவரில் எப்போதும் எழுதிவைத்திருந்த சார்ல்ஸ் மகாய் அவர்களின் கவிதை பகத்சிங்கின் ஆன்மத்தை அழகாகவே காட்டுகிறது.
    'பகைவர்களே இல்லை என்கிறாயா..?  அந்தோ என் நண்பனே
    இப்பெருமிதம் மிக அற்பமானது உனக்கு எதிரிகளே இல்லாது போனால்
    நீ செய்திருப்பது அற்ப சொற்பமானது துரோகி யாரையும் வீழ்த்தியிருக்கமாட்டாய்
    போராட்டத்தில் கோழையாக இருந்திருப்பாய்..' என்று நீளும் இந்த கவிதையை போலவே பகத்சிங்கிற்கு அவர் வாழும் போது எதிரிகளாக பிரித்தானியபேரரசு இருந்தது. அவர் மரணித்த பிறகு அவரின் நினைவையும் அவரின் கருத்துகளையும் மறைக்கும் இந்தியாவை ஆளும் காந்திகள் இருக்கிறார்கள்.
    ச.ச.முத்து.